அன்பான கணவர், சிறந்த அப்பா: மேட்ரிமோனி தூதரான எம்.எஸ்.தோனி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (17:14 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது எந்த போட்டிலும் விளையாடம் ஓய்வில் உள்ளார். தற்போது அவர் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 
லட்சக்கணக்கான இளைஞர்களின் தூண்டுகோலாக இருக்கிறார் தோனி. இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றிருப்பதன் மூலமும், சிறந்த அப்பாவாகவும், அன்பு மிக்க கணவராக விளங்குவதன் மூலமும், அனைவரையும் கவர்ந்துள்ளார். அதனால் பாரத் மேட்ரிமோனியின் விளம்பர தூதர் இடத்துக்கு இவர்தான் பொருத்தமானவர் என பாரத் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் தெரிவித்துள்ளார்.
 
இது தோனி கூறியுள்ளது பின்வருமாறு, கடந்த 18 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க உதவும் பணியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. லட்சக் கணக்கானோருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளித்த இந்த நிறுவனத்துக்கு தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்