Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

Mahendran
சனி, 16 நவம்பர் 2024 (13:51 IST)
உலகமே எதிர்பார்த்த மைக் டைசன் மற்றும் ஜேக்பால் இடையிலான குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை ஜேக்பால் வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
58 வயதான முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் 27 வயதான தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஜேக்பால் ஆகிய இருவரும் போட்டியிட்ட குத்துச்சண்டை போட்டியை உலகமே எதிர்பார்த்து ஆவலாக காத்திருந்தது.
 
இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், ஜாக் பால் டைசனை ஜேக்பால் வீழ்த்தியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு நாக்கவுட் மன்னனான மைக் டைசன் பாக்ஸிங் ரிங்கில் என்ட்ரி கொடுத்தது ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவர் தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பிறகு மைக் டைசன் விளையாடிய போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி கடந்த ஜூலை மாதமே நடக்க திட்டமிட்ட நிலையில், டைசனுக்கு வயிற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments