Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வருடத்துக்குப் பின்னர் மீண்டும் குத்துச்சண்டைக்கு வரும் மைக் டைசன்!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (12:01 IST)
குத்துச் சண்டை உலகின் வீழ்த்த முடியா நாயகன் மைக் டைசன் மீண்டும் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் தான் விளையாடிய 58 போட்டிகளில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அதில் 44 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்து வென்றுள்ளார். மேலும் ரிங்குக்குள் சக வீரரின் காதைக் கடித்து துப்பியது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் இடம்பிடித்தார். 20 ஆண்டுகால சர்வதேசக் குத்துச் சண்டை வாழ்க்கையை அவர் 2005 ஆம் ஆண்டு முடித்துக் கொண்டார்.

அதன் பின்னர் சில சினிமாக்களில் தலைகாட்டிய அவர், இப்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு போட்டியில் தன்னுடைய முன்னாள் சக வீரரான, ஜோன்ஸ் ஜீனியுடன் ஒரு போட்டியில் மோத இருக்கிறார். இதனை மைக் டைசனே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments