ஆஸ்திரேலியாவை வீழ்த்த அவரால் மட்டும்தான் முடியும்! – ட்விஸ்ட் வைத்த மைக்கெல்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (18:54 IST)
கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை ஒரு அணியை தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது என இங்கிலாந்து வீரர் மைக்கெல் வான் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இந்த தொடரில் டேவிட் வார்னர் மூன்று சதங்கள் அடித்து பாகிஸ்தானி திக்குமுக்காட செய்தார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 589 ரன்கள் பெற்று இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த இங்கிலாந்து வீரர் மைக்கெல் வான் “அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடரை பார்த்தேன். ஆஸ்திரேலியா இப்போது இருக்கும் பலத்திற்கு எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்தும். ஆனால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த ஒரு அணியால் மட்டுமே முடியும். கோலி தலைமையில் அமைந்த இந்திய அணிதான் அது” என்று தெரிவித்துள்ளார்.

மூன்று சதம் அடித்த டேவிட் வார்னரும் “400 ரன்கள் அடித்த பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க இந்திய வீரர் ரோகித் ஷர்மாவால்தான் முடியும்” என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments