Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு ஓய்வு தேவை– பிசிசிஐக்கு முன்னாள் வீரர் அறிவுரை !

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (13:21 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லிக்கு உலகக்கோப்பைக்கு முன்னதாக ஓய்வு அளிக்க வேண்டும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

12 ஆவது ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் கோஹ்லியின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் இந்த தொடர் தோல்விகள் மனதளவில் கோஹ்லிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் ‘இந்திய கிரிக்கெட் வாரியம் சரியாக திட்டமிட்டு உலகக் கோப்பைக்காக கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி என்பதால் அதற்கு முன்பாக, அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது இன்றியமையாதது’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு தொடர்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதனால் இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments