மான்செஸ்டர் டெஸ்ட் ரத்துக்கு ஐபிர்ல் தொடரே காரணம்… மைக்கேல் வாஹ்ன் கொந்தளிப்பு!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:15 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனா தொற்றால் கைவிடப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர்.

போட்டி நடக்காததற்கு இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டி திரும்ப நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் திரும்ப நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாஹ்ன் தி டெலிகிராப் நாளேட்டில் எழுதியுள்ள பத்தியில் ‘ஐந்தாவது டெஸ்ட் கைவிடப்பட்டதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரே காரணம். வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக நேரிட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே விளையாட அஞ்சுகின்றனர். கிரிக்கெட்டின் ஆரோக்யத்துக்கு இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது. போட்டியை ரத்து செய்தது அதைப் பார்க்க காத்திருந்த மக்களை அவமானப்படுத்தும் செயல்’ என எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments