Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ ரூட்டை தனியாக விட்டு வீரர்கள் ஒளிந்துகொண்டனர்… முன்னாள் கேப்டன் காட்டம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:03 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆஷஷ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி மிக மோசமாக விளையாடி 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆஷஸ் தொடரில் உள்ள மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்காட் போலந்து தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்ததும் கேப்டன் ஜோ ரூட்டை தனியாக விட்டுவிட்டு அனைத்து வீரர்களும் பெவிலியனுக்கு சென்று ஒளிந்துகொண்டனர் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‘அவர் தோல்வி தர்மசங்கடத்தைத் தரும். அதற்காக ஒருவர் கூடவா ரூட்டுக்கு ஆதரவாக மைதானத்தில் நிற்க முடியவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments