Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா அபாரம்: சென்னையை வீழ்த்திய மும்பை

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (07:03 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொள்ள சென்னை அணியும் தீவிரமாக இருந்தது.
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 75 ரன்களும், ராயுடு 46 ரன்களும், கேப்டன் தோனி 26 ரன்களும் எடுத்தனர்.
 
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, பொறுப்புடன் விளையாடி 19.4 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 56 ரன்களும், லீவீஸ் 47 ரன்களும், யாதவ் 44 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. தோல்வி அடைந்தாலும் சென்னை அணி முதலிடத்தில் தான் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments