Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸிக்கு ’வெண்கல சிலை’ - அணிக்கு மீண்டும் திரும்புவாரா?

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (11:23 IST)
அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 

 
இந்நிலையில் மெஸ்ஸியின் உருவம்பொறித்த வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ப்யூனஸ் அயர்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை மெஸ்ஸியை மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று ப்யூனஸ் அயர்ஸ் மேயர் ஹொராஸி தெரிவித்தார்.
 
சிலிக்கு எதிரான போட்டியில் பெனால்டியை வீணடித்த விரக்தியில் மெஸ்ஸி ஓய்வை அறிவித்திருப்பார். நாடு அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறது. 2018ல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் மெஸ்ஸி கோப்பையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் ஹொராஸி கூறினார்.
 
மூன்று தோல்விக்குப் பிறகு நான்காவதாக வெற்றி கிடைப்பது நிச்சயம் என்றும் அவர் கூறினார்.
 
ஆனால், தனது ஓய்வை அறிவித்த பிறகு மெஸ்ஸி குறித்து வேறு கருத்து ஏதும் இதுவரை கூறவில்லை. தனக்காக ஸ்பான்சர் செய்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தபோதும் மெஸ்ஸி இதுவரை பதிலேதுவும் கூறவில்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments