Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கு ஐபோன் பரிசளித்த மெஸ்ஸி!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (22:27 IST)
உலகக் கோப்பைத் தொடரில் தனது அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு மெஸ்ஸி பரிசளித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி சமீபத்தில் கத்தாரில் நடந்தது.

உலகில் தலைசிறந்த அணிகள் மட்டுமே பங்கேற்ற இப்போட்டியில், இறுதிப்போட்டியில் கடந்த முறை கோப்பை வென்ற பிரான்ஸை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா வென்றது.

இரு அணிகளும் சமமான கோல்கள் அடித்த நிலையில், பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், 4-2 என்ற கோல்கணக்கில் அர்ஜெண்டினா கோப்பை வென்றது.

கடந்த 1978, 1986 ஆண்டுகளுக்குப் பின்னர், அர்ஜெண்டினா கோப்பை வென்றதால் அந்த நாட்டினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றதைக் கொண்டாடும் வகையில்,மெஸ்ஸி, தன் அணியின் பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என மொத்தம் 35 பேருக்கு ஐபோன் பரிசளித்துள்ளார்.

வீரர்களின் பெயர், ஜெர்ஸி எண்கள் ஆகியவை ஐபோனில் தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிய ஹேசில்வுட்… இந்திய அணிக்கு ஆறுதல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!

சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

அடுத்த கட்டுரையில்
Show comments