Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாராஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பத்ம விருதுக்கு பரிந்துரை

பாராஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பத்ம விருதுக்கு பரிந்துரை

பாராஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பத்ம விருதுக்கு பரிந்துரை
, சனி, 24 செப்டம்பர் 2016 (11:49 IST)
2016 ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) மற்றும் தேவேந்திர ஜாஜாரியா (ஈட்டி எறிதல்) ஆகியோர் தங்கப்பதக்கமும், தீபா மாலிக் (குண்டு எறிதல்) வெள்ளிப்பதக்கமும், வருண்சிங் (உயரம் தாண்டுதல்) வெண்கலப்பதக்கமும் வென்று வரலாறு படைத்தனர். அவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து பெருமைப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி பாராட்டினார்.


 
 
இந்நிலையில் அவர்களது சாதனையை பலரும் தங்களது பாராட்டிகளை தெரிவித்தனர். மேலும், மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அவர்களுக்கு பரிசு தொகைகளையும், பல நிறுவனங்கள் பரிசு பொருட்களையும் வழங்கி கெளரவித்தது.
 
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பாராஒலிம்பிக்கில் சாதித்த நமது விளையாட்டு வீரர்களின் பெயர்கள், விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், கவுரவமிக்க பத்ம விருதுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அவர்களது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு பணி: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி