Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பையை வென்ற கையோடு மெஸ்ஸியை சந்தித்த கோட்சே

உலகக்கோப்பையை வென்ற கையோடு மெஸ்ஸியை சந்தித்த கோட்சே

வீரமணி பன்னீர்செல்வம்

, புதன், 16 ஜூலை 2014 (18:19 IST)
உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் வெற்றி கோலை அடித்த மரியோ கோட்சே, போட்டி முடிந்த கையோடு அர்ஜெண்டீனாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
மரியோ கோட்சே என்னதான் உலகக்கோப்பையை வென்ற அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோப்பையை வெல்வதற்கான கோலை அடித்தவராக இருந்தாலும், அவரும் ஒரு மெஸ்ஸியின் ரசிகரைப் போல போட்டி முடிந்த கையோடு மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
 
கோட்சே தனது வலைப்பக்கத்தில் இந்த புகைப்படத்தை "ஜீனியஸ் உடன் நான்" என்ற தலைப்பிட்டு பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதற்கான 'வின்னர் மெடல்'-ஐ கழுத்தில் அணிந்தவாறு புகைப்படம் எடுத்துள்ளார். இருந்தாலும் மெஸ்ஸியுடன் அவர் நிற்கும் புகைப்படத்தில் மிகவும் பவ்யமாகவே காட்சியளிக்கிறார்.
 
கோட்சே ஒரு மெஸ்ஸி ரசிகர் என்பதை ஜெர்மனி அணியின் மேனேஜர், இறுதிப்போட்டி முடிந்தவுடன் அளித்த ப்ரஸ் மீட்டில் பகிர்ந்த செய்தியின் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
 
ஆட்டம் முடிந்தவுடன் ஜெர்மனியின் மேனேஜர் கூறுகையில், மரியோ கோட்சே சப்ஸ்டிடுயூட் (substitute) ஆட்டக்காரராக இருக்கும்போது மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்த்துதான் வளர்ந்தார் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil