Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கரை மாத கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிஸ் விளையாடிய வீராங்கனை

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (06:55 IST)
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் லக்சம்பர்க் நாட்டு வீராங்கனை ஒருவர் நான்கரை மாத கர்ப்பத்துடன் களம் இறங்கி விளையாடி வருகிறார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 



 
 
ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சிறிய நாடு லக்சம்பர்க். இந்த நாட்டைச் சேர்ந்த 31 வயது டென்னிஸ் வீராங்கனை மான்டி மினேலா என்பவர் தற்போது நான்கரை மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விம்பிள்டன் டென்னிசில் விளையாடி வருகிறார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் விளையாடி வரும் மாண்டி மினேலா நேற்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த பிரான்செஸ்கா ஸ்சியாவோனை எதிர்கொண்டார். தன்னம்பிக்கையுடன் விளையாடினாலும் மான்டி மினேலா 1-6, 1-6 என நேர்செட்களில் தோல்வியடைந்தார்.
 
இறுக்கமான ஆடை அணியாமல், தளர்வான ஆடை அணிந்து விளையாடியதால் அவர் தோல்வி அடைந்தார் என்றாலும் நான்கரை மாத கர்ப்பத்துடன் விளையாடிய அவரின் தன்னம்பிக்கையை அனைவரும் மனதார பாராட்டி வாழ்த்தினர். தான் கர்ப்பமாக இருக்கும் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
 
ஏற்கனவே, அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது கர்ப்பமாக இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது மேலும் ஒரு வீராங்கனை கர்ப்பதுடன் விளையாடி வருகிறார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments