Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல்: ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை: சோகத்துடன் வெளியேறிய திண்டுக்கல்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (06:26 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது.



 
 
முதல் ஆட்டத்தில் மதுரை, தூத்துக்குடி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தூத்துகுடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய மதுரை அணி 8.5  ஓவர்களில் வெறும் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்த போட்டித்தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் மதுரை அணி வெளியேறியது.
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லி அணியும் திண்டுக்கல் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சேப்பாக் அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்தௌ 146 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த திண்டுக்கல் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments