Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023; டெல்லியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (07:54 IST)
ஐபிஎல் 2023; டெல்லியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் அணி டிஎல்எஸ் முறையில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 
 
இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் என்று எடுத்தன. அந்த அணியின் மேயர்ஸ் அபாரமாக விளையாட 73 ரன்கள் எடுத்தார். 
 
இதனை அடுத்து 194 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. டெல்லியை பொருத்தவரை கேப்டன் டேவிட் வார்னர் மட்டுமே 56 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் லக்னோ அணியின் மார்க் வுட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதை எடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய நிலவரப்படி லக்னோ அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஐதராபாத்-ராஜஸ்தான் அணிகளும், பெங்களூரு-மும்பை அணிகளும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments