ரூல்ஸை மாத்துனா கடுப்பாயிடுவோம்! – கிரிக்கெட் வாரியத்துக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (09:10 IST)
லோதா கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் கொண்டுவரப்பட உள்ள புதிய விதிகளை மாற்ற கூடாது என அக்கமிட்டி எச்சரித்துள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி புதிய விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்தது. அந்த விதிமுறைகளை அங்கீகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். மீண்டும் அவர்கள் பதவியேற்க விரும்பினால் 3 ஆண்டுகள் கழித்துதான் விண்ணப்பிக்க முடியும். மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது போன்ற நிறைய புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகளை ஏற்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. பொதுக்குழுவில் இந்த விதிமுறைகளை மாற்றி மீண்டும் பழைய விதிமுறைகளையே பின்பற்றுமாறு செய்யக்கூடாது எனவும், இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்த புதிய நடைமுறைகள் அவசியம் எனவும் லோதா கமிட்டி எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments