Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லியாண்டர் பயஸ் உள்ளே; சானியா மிர்ஸா வெளியே

லியாண்டர் பயஸ் உள்ளே; சானியா மிர்ஸா வெளியே
, சனி, 31 ஜனவரி 2015 (16:31 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதி போட்டியில் லியாண்டர் பெயஸ் இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே சமயம் சானியா மிர்ஸா இணை வெளியேறியது.
 

 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில், கலப்பு இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 7–5, 6–4 என்ற நேர் செட்டில் சு–வெய் ஹூசை (சீனத் தைபே) – பாப்லோ குவாஸ் (உருகுவே) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
 
webdunia

 
அதே சமயம் மற்றொரு அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்ஸா – பிரேசிலின் புருனோ சோரஸ் 6–3, 2–6 (8–10) என்ற செட் கணக்கில் கிரிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) – டேனியல் நெஸ்டர் (கனடா) இணையிடம் வீழ்ந்தனர்.
 
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச்சும், நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும் மோதினர். மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 4 முறை சாம்பியனான ஜோகோவிச் 7–6 (7–1), 3–6, 6–4, 4–6, 6–0 என்ற செட் கணக்கில் வெற்றியை சுவைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை சந்திக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil