Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபா டெஸ்ட் வெற்றியின் போது கண்ணீர் விட்டு அழுதேன்… முன்னாள் இந்திய வீரர் உருக்கம்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (11:01 IST)
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டு ரஹானே பெற்ற இந்த வெற்றியை பல முன்னாள் இந்திய வீரர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் ஆஸி அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய விவிஎஸ் லஷ்மன் இதுகுறித்து உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார்.

அதில் ‘காபா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் நான் என் குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தேன். பண்ட்டும் சுந்தரும் விளையாடும் போது மிகவும் பதற்றமாக இருந்தேன். காபா போட்டிக்கு முன்பு பலரும் கணித்தது வேறு ஆனால் நடந்தது வேறாக இருந்தது.  நான் இரண்டு முறை ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற போது, காபா டெஸ்ட்டை வென்ற போதும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா சின்னசாமி மைதானம்?... RCB ரசிகர்கள் சோகம்!

சஞ்சுவைத் தர்றோம்… ஆனா அந்த மூனு பேரில் ஒருத்தர் வேணும்… RR வைத்த டிமாண்ட்!

தொழிலதிபரின் பேத்தியோடு சச்சின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படம்!

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

அடுத்த கட்டுரையில்
Show comments