Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது சாதனையை முறியடிக்க இவர்களால்தான் முடியும் – லாரா சொன்ன இருவர் யார் ?

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (10:33 IST)
கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த இருவரால் முறியடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக பிரையன் லாராவின் 400 ரன்கள் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன் பின் யாராலும் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. அந்த சாதனையை தகர்க்க விரைவாக ரன்களைக் குவித்தும் விக்கெட்டை இழக்காமலும் விளையாட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

இந்நிலையில் பிரையன் லாரா தனது சாதனையை இந்தியாவைச் சேர்ந்த இருவரால் முறியடிக்க முடியும் எனக் கூறியுள்ளார். அதில் தற்போதைய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் ரோஹித் ஷர்மாவின் பெயரையும் 19 வயதான பிருத்வி ஷாவின் பெயரையும் சொல்லியுள்ளார். இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் பிருத்வி ஷாவின் பெயரை சொல்லி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments