Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லிக்கு அடுத்து ராகுல்தான் – புகழ்ந்துத் தள்ளிய லாரா !

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (11:04 IST)
இந்திய அணியில் தற்போதைய நிலையில் கோஹ்லிக்கு அடுத்து சிறந்த பேட்ஸ்மேனாக ராகுல்தான் விளங்குகிறார் என மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா ராகுல் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அவர் ‘தற்போதைய நிலையில் விராட் கோலியைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான். ஏனென்றால் அவர் 4 ஆவது வீரராகவும் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடினார். ராகுலிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் உள்ளது. ஸ்விங் பந்துகளை அவர் எளிதாக எதிர்கொள்கிறார். இந்தத் தொடர் முடியும் போது அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவரையும் நான் எதிர்பார்க்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் தேர்வாகவில்லை: அஜித் அகர்கர் விளக்கம்..!

கேப்டனாக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்! ஆசியக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

அவருக்கு மாற்றே இல்லை… ரோஹித் ஷர்மாவைப் புகழ்ந்த முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments