டிஎன்பில் கிரிக்கெட்: கோவை, சேப்பாக் அணிகள் அபார வெற்றி..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (07:02 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நேற்று நடந்த இரண்டு போட்டியில் கோவை மற்றும் சேப்பாக் அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. 
 
நேற்று நடந்த முதலாவது போட்டியில் கோவை மற்றும் மதுரை அணிகள் மோதின. இந்த போட்டியில் கோவை அணி முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் எடுத்த நிலையில் 209 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி 164 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் கோவை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
அதேபோல் நேற்றைய இரண்டாவது போட்டியில் சேப்பாக்கம் மற்றும் திருச்சி அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி பெரும் 77 ரன்களில்  ஆட்டம் இழந்ததை அடுத்து சேப்பாக் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
திருச்சி அணி இன்னும் புள்ளி பட்டியலில் ஒரு புள்ளியை கூட எடுக்காமல் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கோவை அணி 12 புள்ளிகள் உடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் மிட்செல் ஸ்டார்க்!

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

அடுத்த கட்டுரையில்
Show comments