பார்ட்னர்ஷிப் முக்கியம்… அது நடக்கவில்லை – கோலி வேதனை!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:34 IST)
நேற்றைய போட்டியில் ஆர் சிபி அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் அபார பந்து வீச்சு காரணமாக பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது. வருண்  சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் அது மட்டுமின்றி அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பந்துகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது

போட்டி முடிந்த பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் கோலி ‘ ஆரம்பத்திலேயே பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பார்ட்னர்ஷிப் முக்கியம், 42 ரன்களுக்குப் பிறகு 20 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்துவிட்டோம். சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள ஒரு போட்டி தேவைப்படும். ஆனால் அந்த ஒரு போட்டி இரண்டாக மாறிவிடக் கூடாது. அடுத்த போட்டியிலிருந்து வெற்றி பெறுவதற்கான அணி எங்களிடம் உள்ளது. வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments