Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் போட்டியில் 14 மாதங்களுக்குப் பின் அரைசதம் அடித்த கோலி

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (18:27 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது அகமதாபாத் மைதானத்தில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் எடுத்தன.
 

இதையடுத்து நேற்று இரண்டாம் நாளில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதம் அடித்தார். பின்னர் 128 ரன்களில் அவுட்டானார்.

இதையடுத்து,  கேப்டன் ரோஹித் 35 ரன்னிலும், புஜாரா 42 ரன்னிலும்  அவுட்டானார். இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். இவர் 128 பந்துகளைச் சந்தித்து, 59 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார்.

ஜடேஜா16 ரன்களுடனும் விராட் கோலி 59 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்றைய 3 ஆம் நாள் ஆட்ட  முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ்கில் 480 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை எட்ட இந்திய அணிக்கு 191 ரன்கள் தேவையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments