2019 உலகக்கோப்பையில் தோனி: கோலி நம்பிக்கை!!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (14:27 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பையில் தோனி பங்குபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து கோலி, கூறியதாவது:-

டெஸ்ட் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் தோனிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் உள்ளது. 
 
இந்த வாய்ப்புகள் நிச்சயம் அவருக்கு உத்வேகத்தை அளிக்கும். இதை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டு 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
 
2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு யுவராஜ் சிங் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். தேர்வின் அடுத்த குறியாக தோனி உள்ளார். 
 
சிறப்பாக விளையாடாவிட்டால் அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டு அவர் இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது நி‌ஷப்பந்தை தேர்வு செய்யும் முடிவில் தேர்வு குழுவினர் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments