இந்த வெற்றிக்கு காரணம் அனுஷ்காதான்: கோலி!

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (13:26 IST)
தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணி மகிழ்ச்சியில் உள்ளது. கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியது பின்வருமாறு...
இந்த தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு, எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களையே காரணமாக கூற முடியும். மிகவும் கடினமான நேரங்களில் எனக்கு தூண்போல இருந்து வலிமையை கொடுத்தவர் எனது மனைவி அனுஷ்கா சர்மா. அவருக்கு எனது நன்றி. இந்த தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு அவர்தான் காரணம். 
 
இந்த வெற்றிக்கு பின் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த தொடர் முழுவதும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். டி20 தொடரை எதிர்பார்த்து இருக்கிறோம். இந்த தொடரும், வெற்றியும் முடிந்துவிடவில்லை என தெரிவித்தார். 
 
ஒருநாள் தொடரில் 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் சேர்த்து ஒரு தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments