Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு எப்போது ? கோலி சூசகமான பதில் ! அதிர்ச்சியான ரசிகர்கள் !

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:15 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி இன்னும் 3 ஆண்டுகள் எல்லாவிதமான போட்டிகளிலும் விளையாடுவேன் எனக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி உலக கிரிக்கெட் விளையாடும் அணிகளில் அதிகளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக வீரர்களின் உடல்நிலை மோசமடையும் சூழ்நிலை உருவாகிறது. இதைப் பற்றி கோலி முன்பே பேசியுள்ள நிலையில் இப்போது மீண்டும் இது குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘ஒரு ஆண்டில் 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக நாங்கள் செலவிடுகிறோம். இதனால் வீரர்களின் உடல் வலிமை பாதிக்கப்படும். இப்போது இருப்பது போலவே எப்போதும் உடல் தாங்காது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா முக்கியமான உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது. அதுவரை அனைத்து விதமானப் போட்டிகளிலும் விளையாடுவேன். அதன் பின்னர் ஏதாவது ஒரு வடிவிலான போட்டியில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments