கோலியையும் சாய்த்த ஆண்டர்சன்… அதலபாதாளத்தில் இந்தியா!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி ஆண்டர்சன் பந்துவீச்சில் மீண்டும் வீழ்ந்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ராகுலும் ரோஹித்தும் களமிறங்கினர். நான்கு ஓவர்களுக்குள்ளாகவே ராகுல் ரன்கள் எதுவும் எடுக்காமலும் புஜாரா ஒரு ரன்னிலும் நடையைக் கட்டினர். அதன் பின்னர் ரோஹித்தோடு கோலி ஜோடி சேர்ந்து சிறுது நேரம் தாக்குப் பிடித்தார். ஆனால் அவரும் 7 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 விக்கெட்களையும் ஆண்டர்சனே கைப்பற்றியுள்ளார். கோலி தொடர்ந்து ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆவது வாடிக்கையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments