Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு தலைவலி கொடுக்கும் ரோகித்?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (16:10 IST)
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 
 
இலங்கை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணிக்கு, உண்மையான சோதனை தென் ஆப்ரிக்க மண்ணில்தான் காத்திருக்கிறது. 
 
தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நான்கு பவுலர்களுடன் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
அணியில் ரோகித் சர்மா வருகையால் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 6 வீரராக யாரை களமிறக்குவது என கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் கைகொடுத்து வருகிறார். எனவே, யாரை எங்கு களமிறக்குவது என தலையை பிய்த்துக்கொள்கிறாராம் கோலி. இந்த அணியை வைத்து உலக கோப்பைக்கு ஒத்திகை பார்க்கும் கோலிக்கு இது பெரிய தலைவலிதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments