Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

Siva
ஞாயிறு, 19 மே 2024 (19:39 IST)
ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கெளஹாத்தி மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்க தாமதம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

புள்ளி பட்டியலை பொருத்தவரை கொல்கத்தா அணி 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் மட்டுமே இரண்டாவது இடத்தை பிடிக்க முடியும்.

ஒரு வேளை மழை வந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளித்தால்  ராஜஸ்தான் அணிக்கு 17 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் ஹைதராபாத் அணியும் 17 புள்ளிகள் இருக்கும் நிலையில் அந்த அணி ரன் ரேட் அதிகம் வைத்திருப்பதால் ஹைதராபாத் அணிதான் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பதும் இதனால் குவாலிஃபையர் 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணி விளையாட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய போட்டி நடந்து அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாவது இடத்தை பிடித்து குவாலிஃபையர் 4 போட்டியில் விளையாடும் தகுதியை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

உலகக்கோப்பை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments