Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் அணியை வீழ்த்திய காரைக்குடி காளை

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (23:50 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று நடந்த போட்டி ஒன்றில் காரைக்குடி காளை அபாரமாக விளையாடி சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியை வீழ்த்தியது
 
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்கள் குவித்தது. அனிருதா 56 ரன்களும், ஷாஜன் 43 ரன்களும், பஃனா 31 ரன்களும் எடுத்தனர்.
 
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி சேப்பாக்கம் அணி, 20 ஓவரக்ளில் 6 விக்கெட்டுக்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து மூன்று போட்டிகள் விளையாடியுள்ள சேப்பாக்கம் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட ருசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
காரைக்குடி அணியின் ஸ்ரீகாந்த் அனிருதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று மதுரை மற்றும் தூத்துகுடி அணிகளுக்கு இடையிலான போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன்

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை மட்டும் சீக்கிரம் வீழ்த்துங்கள்… பாக் வீரர்களுக்கு அக்தர் அறிவுரை!

தோனியின் சாதனை முந்திய சஞ்சு சாம்சன்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: ஹர்திக் பாண்டியா நீக்கமா? அவருக்கு பதில் உள்ளே வருவது யார்?

சூர்யகுமார் யாதவ்வுக்கு 30 சதவீத போட்டிக் கட்டணம் அபராதம்.. ஐசிசி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments