Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி அணியை வீழ்த்திய காரைக்குடி காளை

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (09:14 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் நடந்த போட்டியில் காஞ்சி மற்றும் காரைக்குடி அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் அடித்தது. விஷால் 40 ரன்களும், சஞ்சய் 27 ரன்களும் அடித்தனர்.
 
இதனையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. காரைக்குடி அணி கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதாவின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா 93 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதினை தட்டி சென்றார். 
 
இந்த வெற்றி காரைக்குடி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்… 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!

2025 ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் எப்போது? எத்தனை போட்டிகள்? இறுதிப்போட்டி இந்த தேதியிலா?

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள்… ஆட்டம் காணும் இந்திய பேட்டிங்… காப்பாற்றுவாரா கோலி?

ஆடும் லெவனிள் அஸ்வின், சர்பராஸ் கான் இல்லாதது ஏன்?... கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments