Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன் வில்லியம்சன் – சாரா ஜோடிக்கு ஆண் குழந்தை! – கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
திங்கள், 23 மே 2022 (13:22 IST)
நியூஸிலாந்து கிரிக்கெட் வீரரும், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணி கேப்டனுமான கேன் வில்லியம்சனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். அவரது பதட்டமில்லா ஆட்டமும், தோல்வியிலும் சோகம் காணாத முகமும் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்களை அதிகரிக்க செய்துள்ளது.

தற்போது கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக விளையாடி வருகிறார். இவருக்கு சாரா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கருதரித்த சாரா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள கேன் வில்லியம்சன் ”குடும்பத்திற்கு வரவேற்கிறேன் குட்டி பையா” என பதிவிட்டுள்ளார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் ஜெய்ஸ்வால்?

நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை… அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளட்டும் – ஹர்பஜன் சிங் காட்டம்!

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments