தெளிவாக அவுட் என்று தெரிந்தும் மறுத்த நடுவர்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே எல் ராகுல்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (10:48 IST)
நேற்று நடந்த பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மூன்றாம் நடுவரின் தவறான கணிப்பால் தேவ்தத் படிக்கல் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார்.

ஐபிஎல் தொடரில் 48வது  போட்டியில் நேற்று பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து சற்றுமுன் படிக்கல் மட்டும் விராட் கோலி களமிறங்கி விளையாடினர். 

அப்போது தேவ்தத் படிக்கலுக்கு விக்கெட் கீப்பிங் கேட்சுக்காக டிஆர்எஸ் முறையில் ரிவ்யூ கேட்கப்பட்டது. அப்போது பந்து க்ளவுஸில் பட்டு செல்வது ஸ்னிக்கோ மீட்டரில் தெளிவாக தெரிந்தும் மூன்றாம் நடுவர் நாட் அவ்ட் கொடுத்தார். இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த பஞ்சாப் அணி கேப்டன் கே எல் ராகுல் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் கள நடுவர் முடிவு என் கையில் இல்லை எனக் கூறிவிட்டார். ஆனால் இது சம்மந்தமாக ரசிகர்கள் இணையத்தில் நடுவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்! என்ன காரணம்?

பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய அஷ்வின்… காரணம் என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments