Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ம விருதுகளுக்கு சிபாரிசா? ஏன் என் திறமை போதாதா? - சக வீரர்கள் ஆவேசம்!!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (11:35 IST)
பத்ம விருதுகள் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது குறித்து பேட்மிண்டன் வீராங்கணை ஜூவாலா கட்டா மற்றும் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி அதிருப்தி தெரிவித்துள்ளனர். 


 
 
பேட்மிண்டன் வீராங்கணை ஜூவாலா கட்டா:
 
பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டா, ஆசியப் போட்டி உட்பட ஏராளமான போட்டிகளில் பதங்கங்களை குவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். மேலும், 15 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
 
ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி:
 
ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி, இதுவரை 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 முறை தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
 
பத்ம விருதுகள்:
 
இந்நிலையில் ஒருவரும் பத்ம விருதுகளுக்கு தங்களது பெயர் இடம் பெறாததால் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
ஜூவாலா கட்டா, உரிய தகுதிகள் இருந்தும் ஏன் சிபாரிசு கடிதத்தை தேடிச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பிரிவில் கலந்துகொண்டு விளையாடிய முதல் வீராங்கனை தான் எனவும் பதிவிட்டுள்ளார்.
 
இதே போல், பத்ம பூசன் விருதுக்கு தாம் தேர்வு செய்யப்படாதது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு பங்கஜ் அத்வானி ட்வீட் செய்துள்ளார். பத்ம பூசன் விருதுக்கு இதைவிட இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

கோலியுடன் ஒரே அணியில் விளையாட ஆசைப்பட்டேன்… டேவிட் வார்னர் உருக்கம்!

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments