Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூற்றாண்டின் சிறந்த பந்து ?– ஜோப்ரா அடித்த சிக்ஸர் !

Webdunia
ஞாயிறு, 9 ஜூன் 2019 (09:37 IST)
நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் ஜோப்ரா தான் வீசிய பந்தில் விக்கெட்டையும் சிக்ஸரையும் ஒரு சேர கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் 12 ஆவது ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து அணியும் வங்கதேசமும் மோதின. இதில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவதாக வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் வங்கதேச வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசிக் கொண்டிருந்தார்.

வங்கதேச பேட்ஸ்மேன் சவுமியா சர்க்கார் பேட் செய்து கொண்டிருந்த போது அசுர வேகத்தில் (கிட்டத்தட்ட 90 மைல்) அவர் வீசிய பந்து ஸ்டெம்புகளைப் பதம் பார்த்தது. ஸ்டம்புகளில் பட்ட பந்து மேல் நோக்கி எழும்பியது. அனைவரும் விக்கெட்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி போய் விழுந்தது. டிவி ரிப்ளையில் அதைக் காட்டிய போது ரசிகர்களும் வீரர்களும் மூக்கை விரல் வைத்தனர்.

ஜோப்ரா ஆச்சரின் அசாத்தியமான வேகமே இதற்குக் காரணம் என்றும் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து இதுதான் எனவும் பலரும் புகழாரம் சூடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments