மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஐபிஎல் பிரபலம்..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (15:43 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து மேற்கிந்த தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐபிஎல் போட்டியின் மூலம் பிரபலமான ஜெய்ஸ்வால் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றது மட்டுமின்றி தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் சுப்மன்கில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments