Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் லீக் கால்பந்து போட்டி: டெல்லி டைனமோஸ் -புனே சிட்டி ஆட்டம் டிரா

Webdunia
புதன், 15 அக்டோபர் 2014 (09:52 IST)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ்–புனே சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.
 
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள். இப்போட்டிகள் அக், 12 தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அக், 14 நேற்று இரவு நடந்த 3 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்–புனே சிட்டி அணிகள் மோதின. சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அணியாக டெல்லி திகழ்கிறது. 5 முறை இலக்கை நோக்கி ஷாட் அடித்த டெல்லி வீரர்களின் முயற்சிகளை புனே கோல் கீப்பர் தொடர்ந்து முறியடித்தார். 
 
புனே சிட்டி வீரர்களின் ஆட்டமும் இறுதிவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதியில் ஆட்டம் கோல் எதுவுமின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அக், 15 இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை எப்.சி - எப்.சி. கோவா ஆகிய அணிகள் படோர்டா நேரு மைதானத்தில் மோதவுள்ளன. 

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Show comments