Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500வது டெஸ்ட் போட்டியில் சிக்குன்குன்யா காரணமாக இஷாந்த் சர்மா ஓய்வு

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (12:17 IST)
இந்திய வேகப் பந்து வீசசாளர் இஷாந்த் சர்மாவுக்கு சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் 22ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

 
டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ம் தேதி கான்பூர் மைதானத்தில் தொடங்குகிறது.
 
இந்த நிலையில் இந்திய அணிக்கு முக்கியப் பின்னடைவாக இஷாந்த் சர்மா சிக்குன்குன்யா காரணமாக அவர் முதல் போட்டியில் இடம் பெற மாட்டார் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்குப் பதில் வேறு வீரர் அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், மீதம் உள்ள 14 வீரர்களிலிருந்து விளையாடும் 11 பேரை தேர்வு செய்யப் போவதாகவும் கும்ப்ளே கூறியுள்ளார். 72 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இஷாந்த் சர்மா 209 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவும், நியூசிலாந்தும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளன. இதில் முதல் டெஸ்ட் போட்டியானது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டி என்பது விசேஷமானது. 

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments