Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஷான் கிஷனைத் தாக்கிய பவுன்சர்… மருத்துவப் பரிசோதனை!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (11:00 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான்  நேற்றைய போட்டியில் குமாரா வீசிய பவுன்சரால் தாக்கப்பட்டார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது. அதில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜா ஆகியோர் அதிரடியில் வெளுத்து வாங்கினர்.

இந்த போட்டியில் இந்தியா பேட் செய்த போது நான்காவது ஓவரை இஷான் கிஷான் எதிர்கொண்டார். அப்போது குமாரா வீசிய பவுன்சர் அவரின் ஹெல்மெட்டை தாக்கியது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் களத்திலேயே முதலுதவி செய்தனர். தொடர்ந்து விளையாடிய அவர் சில பந்துகளுக்குப் பின்னர் அவுட் ஆனார்.

ஆனால் தலையில் அடிபட்டதால் அவருக்கு கன்கஷன் சோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் இப்போது செய்யப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments