Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ ? ரசிகர்கள் குழப்பம் !

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (19:10 IST)
’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ ? ரசிகர்கள் குழப்பம் !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 30 ஆக இருந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும்வரை மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகள் வருடா வருடம் மார்ச்சில் துவங்கும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடமும் நடப்பதாக அறிவிப்புகள், பல்வேறு அணிகள் பங்கேற்கும் அட்டவணைகள் வெளியானது.
 
அண்மையில் தோனி, சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கல் அதிகரித்துள்ளதால், இம்முறை போட்டிகள் நடக்குமா என்று குழப்பம் உருவாகியுள்ளது. மேலும், வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாடும்போது அவர்களுக்கு, கொரானா வைரஸ்தொற்று ஏற்பட்டாலோ அல்லது, பாதியிலேயே அந்த விளையாட்டை கைவிடுவது போன்றவற்றை எதிர்கொள்வது போன்ற சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பிசிசிஐயின் தலைவர் கங்குலி இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள்வெளியாகிறது. மேலும், விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் பிசிசிஐ இதுகுறித்து பேசி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்தப் போட்டி நடக்குமா என்பது குறித்து ஐபிஎல் நிர்வாகம் முறையான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியான பின் தான் ரசிகர்களின் குழப்பம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments