Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயதிலேயே தோனி போல வருவீர்கள் என்று சொன்னேன்… சஞ்சு சாம்சனை பாராட்டிய சசி தரூர்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:28 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வீரராக ராஜஸ்தான் ராயல்ஸின் சஞ்சு சாம்சன் உருவாகியுள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியைப் பார்த்தவர்கள் சுவாரஸ்யத்தின் உச்சத்துக்கே சென்றிருப்பார்கள். அந்தளவுக்கு மிகவும் விறுவிறுப்பான போட்டியாக அமைந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தவர் சஞ்சு சாம்சன். அவர் 42 பந்துகளில் 85 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவருக்கு நீண்டகாலமாகவே இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் அவரை பற்றி பேசியுள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர் ‘எனக்கு சாம்சனை பல வருடங்களாக தெரியும். அவருக்கு 14 வயதாகும் போதே நீங்கள் தோனியை போல வருவீர்கள் என சொன்னேன். அந்த நாள் இப்போது வந்துவிட்டது.’எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கம்பீர் ‘சாம்சன் வேறொரு வீரராக இருக்க தேவையில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் சஞ்சு சாம்சன் ஆக இருப்பார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ… சொந்த டீம் ப்ளேயர்களையே அவுட்டாகும் கோலி.. மோசமான சாதனை!

இது என் ஊரு.. என் க்ரவுண்டு..! சொல்லியடித்த ’கில்லி’ கே.எல்.ராகுல்!

தோனியின் பேச்சைக் கேட்காத ருத்துராஜ்… அதனால்தான் அவர் விலக்கப்பட்டாரா?... கேலி செய்யும் ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக அந்த சாதனையைப் படைத்த விராட் ‘கிங்’ கோலி!

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை… தோனி படைக்கப் போகும் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments