Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் திடீர் திருப்பம்: இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (22:17 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லது குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும் என்பதுதான் நியூசிலாந்து அணியின் இலக்காக இருக்க வேண்டும்.
 
ஆனால் தற்போது வரை போட்டி போகிற போக்கை பார்த்தால் நியூசிலாந்து அணி மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் என தெரிகிறது. நியூசிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்து நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து வெளியேறி பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
 
இவ்வாறு ஒரு அதிசயம் நடந்தால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா முதல் அரையிறுதியிலும், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரண்டாம் அரையிறுதியிலும் மோதும் நிலை ஏற்படும். இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் வென்றுவிட்டால் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் நிலை ஏற்படும்
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் மோதிய வரலாறு இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதுதான் கிரிக்கெட் வரலாற்றிலேயே முக்கியமான போட்டியாக கருதப்படும். அப்படி ஒரு நிலை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments