இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (13:41 IST)
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ர்ன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்றைய போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய போது திடீரென மழை குறுக்கிட்டது
 
இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் மீண்டும் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த  நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறையில் கணக்கிடப்பட்டது. 14.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. இதனையடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லந்து  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments