Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே தோல்வியால் புள்ளிப்பட்டியலில் குழப்பம்.. பிளே ஆஃப்வுக்கு செல்லும் 3 அணிகள் எவை?

Webdunia
திங்கள், 15 மே 2023 (07:33 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்து புள்ளி பட்டியலில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
10 புள்ளிகள் இருந்த கொல்கத்தா அணி நேற்று வெற்றி பெற்றதை அடுத்து 12 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர், ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய நான்கு அணிகள் 12 புள்ளிகளிலும் லக்னோ 13 புள்ளிகளிலும் மும்பை 14 புள்ளிகளிலும் உள்ளது. 
 
இந்த நிலையில் 16 புள்ளிகள் உடன் இருக்கும் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டாலும் மீதமுள்ள 7 அணிகளில் எந்த அணிகள் வேண்டுமானாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் மூன்று அணிகளில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கூட அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது என்பதும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி முக்கியத்துவம் இல்லாததாக கருதப்படுகிறது.  ஆனால் நாளை நடைபெறும் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி போட்டியில் வெற்றி பெறும் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் புள்ளி பட்டியலில் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எது என்பதை கணிக்க முடியாத அளவில் குழப்பத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments