Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐபிஎல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (12:22 IST)
செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐபிஎல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் போட்டி ஆரம்பம் ஆகும் என ஐபிஎல் நிர்வாகி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார் 
 
செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் நவம்பர் 8ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு நடப்பது உறுதி செய்யப்பட்டது
 
கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி அதன்பின் ஏப்ரல்-மே என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் போட்டிகள் ஒரு கட்டத்தில் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது 
ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை மூன்று மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒரு மாதம் முன்னரே ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments