Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ ஐபிஎல் போட்டிகள்’’ நடக்குமா ? நடக்காதா ? பிசிசிஐ முக்கியத் தகவல் !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (14:30 IST)
இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
 

ஆனால் தற்போது மீண்டும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ கூறியபோது, ‘மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை மறந்து விடுங்கள் என்று கூறியிருந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? என்பது சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐயின் அதிகாரி கூறியதாக ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments