Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; நட்சத்திர வீரர்கள் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (19:59 IST)
டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சொந்த நாடு திரும்ப உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், சாதாரண மக்கள் முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றின் தீவிரம் கருதி மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோவது அதிகரித்துவருகிறது. அதேசமயம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இதன் தாக்கத்தால் நடப்பு ஐபிஎல் தொடர் பாதிக்கப்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் அணியிலிருந்து ஆஸ்திரேலியா  வீரர்களான  ஆடம் சம்பா, மேன் ரிச்சர்ட்சன் இருவரும் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவருவதால் அவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய நாடு வரும் மே 15 ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்துவரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

தங்கள் நாட்டின் எல்லையை மூடிவிட்டால் தங்களா செல்ல முடியாது என்று கருதி ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சொந்த நாடு திரும்ப உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் இவர்களும் தங்கள் சென்றுவிட்டால் ஐபிஎல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிசிசிஐ ஐபிஎல் வீர்களை பாதுகாக்க தனிகவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments