Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் அனைவரும் கிரிக்கெட்டர்கள்… கோலிக்கு ஆதரவாக பாக் முன்னாள் கேப்டன்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (16:27 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினரை மிரட்டும் விதமாக சிலர் பேசிவருவது கண்டனத்துக்குரியது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது. இந்நிலையில் சிலர் கேப்டன் கோலியை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கோலியின் மகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை மிரட்டும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

இது சம்மந்தமாக தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ‘கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். கோலியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சியை விமர்சிக்கலாம். ஆனால் அவரின் குடும்பத்தைத் தாக்கிப் பேசுவதும் மிரட்டுவதும் தவறாகும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments