Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச பேட்மிட்டன் தரவரிசை - சாய்னாவிற்கு மூன்றாம் இடம்

சர்வதேச பேட்மிட்டன் தரவரிசை - சாய்னாவிற்கு மூன்றாம் இடம்
, வெள்ளி, 23 ஜனவரி 2015 (16:18 IST)
சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சாய்னா நெய்வால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 

சாய்னா நெய்வால்..
 
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில் சாய்னா 4ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். முதல் இரண்டு இடங்களில் சீனாவின் லி சுவேருயி, ஷிஜியான் வாங் ஆகியோர் உள்ளனர். பி.வி.சிந்து 2 இடங்கள் முன்னேறி, 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
webdunia

பி.வி.சிந்து..
 
அதேசமயம், ஆடவர் பிரிவில் கடந்த ஆண்டு 4ஆவது இடத்தை எட்டிப்பிடித்த இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த், தற்போது 5ஆவது இடத்திற்கு பின்தங்கினார். மற்ற இந்திய வீரர்களான காஷ்யப்  15ஆவது இடத்திற்கும், பிரனோய் 18ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil