Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி அறிவிப்பு – தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் !

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (09:01 IST)
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்திய ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று அனைத்து வடிவிலானப் போட்டிகளிலும் விளையாடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான அணித்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தொடர்தான் உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு முன்னர் இந்தியா விளையாடும் சர்வதேசத் தொடர் என்பதால் இதில் இடம்பிடிக்கும் வீரர்களே உலகக்கோப்பையிலும் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டது. இதையடுத்து நேற்றைய அணித்தேர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவன் போன்ற முன்னணி வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. நல்ல பார்ம்மில் இருந்த தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கே எல் ராகுல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் முதல் இரண்டுப் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு கடைசி 3 ஆட்டங்களில் மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ்விற்குப் பதில் புதுமுக வீரர் மயங்க் மார்க்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணி
1. விராட் கோலி, 2. ரோஹித் ஷர்மா, 3. ஷிகர் தவன், 4. அம்பத்தி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. மகேந்திர சிங் தோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. கேஎல் ராகுல்.

முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி
1. விராட் கோலி, 2. ரோஹித் ஷர்மா, 3. தவன், 4. ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. தோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. சித்தார்த் கவுல், 15. கேஎல் ராகுல்.

டி20 போட்டிக்கான இந்திய அணி
1. கோலி, 2. சர்மா, 3. தவான், 4. ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. தோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. ராகுல்

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments